இது போல ஆயிரம் கதைகள் இருக்கிறது ஒவ்வொரு ஹீரோவுக்குள்ளும். இவ்வளவு ஏன்? சேது படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் தோல்விகளின் நாயகன் விக்னேஷ்தான். பிறகுதான் அதில் விக்ரம் நடிக்க வந்தார். இப்படி லேட்டஸ்டாக வந்து தமிழ்சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் அங்காடிதெரு படத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா?
பேராண்மையுடன் நடைபோட்ட ஜெயம் நடிகர்தான்! என்னவோ, இந்த கதையின் வெற்றியை அவரால் முன்கூட்டியே உணர முடியவில்லை. இவர் வேண்டாம் என்று மறுத்த பின் பல ஹீரோக்களிடம் அலைந்த வசந்தபாலன், பிறகுதான் மகேஷ் என்ற புதுமுகத்தை தேடிப்பிடித்தார். இவர் தேடிய ஆயிரம் புதுமுகங்களில் மகேஷ்தான் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் இவரை 'ஆயிரத்தில் ஒருவன்' என்றே அழைக்கிறார் வசந்தபாலன்.
சரி இப்போது என்னவாம்? நல்ல கதையை விட்டுட்டேனே என்று புலம்புகிறாராம் ஜெயம் நடிகர்.
0 Response to "மிஸ் பண்ணிட்டேனே... -அங்காடிக்காக அழும் ஹீரோ"
Post a Comment