படப்பிடிப்பில் படுகாயமடைந்த கங்கனா ரணவத்!

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரணவத். இவர், ஆனந்த் ராய் இயக்கும் தனு வெட்ஸ் மனு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜலந்தர் அருகில் நடந்தது. புல்லட் மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு வேகமாக ஓட்டுவதுபோன்ற காட்சியில் நடித்தார் கங்கனா. திருப்பம் ஒன்றில், மோட்டார் சைக்கிள், சறுக்கி விழுந்தது. இதில் கங்கனாவின் இடதுகால் டயருக்கு அடியில் சிக்கிக்கொண்டது. கம்பி ஒன்றும் அவரது காலை இறுக்கியது. படுகாயம் அடைந்த அவர், வலியால் கதறினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு, ஜலந்தரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். காயம் அடைந்த இடத்தில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒரு வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் தி வாரியரில் நிஜ ரஜினியா?

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குமுன் தனது மகளும் சுல்தான் தி வாரியர் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யாவுடன் ஏ.ஆர்.ரகுமானை நேரில் சந்தித்துள்ளார் ரஜினி. படத்தின் பாடல்கள் குறித்து பேசியதுடன் அதனை விரைவாக முடித்துத்தர இந்த சந்திப்பில் ரகுமானிடம் கேட்டுக் கொண்டாராம் ரஜினி. முதலில் இந்த அனிமேஷன் படத்தில் ஆக்ரோஷ கதாநாயகனாக வளர்ந்து வந்தார் ரஜினி. இப்போது அதில் ஒரு முக்கியமான மாற்றம். முப்பது நிமிடங்கள் நிஜமான ரஜினியாகவே தோன்றப் போகிறாராம் சூப்பர் ஸ்டார். படம் தொடங்கிய போது இப்படியொரு யோசனை சௌந்தர்யாவிடம் இல்லை. அனிமேஷன் ரஜினியை மட்டும் காட்டினால் பொம்மைப் படம் என்று ரசிகர்கள் நினைத்து ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்த நிஜ ரஜினி கதாபாத்திரம் என்று விளக்கம் தருகிறார் சௌந்தர்யா. நிஜ ரஜினிக்கு ஒரு அறிமுக பாடல் இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க வந்திருக்கிறார். இந்த பாடலை வழக்கம் போல வைரமுத்துவே எழுதப் போவதாகவும் தகவல்.

பிரபுதேவா - நயன் 'தேனிலவு'!

நயன்தாராவுடனான காதலில் இனி மறைக்க ஒன்றுமில்லை என்பதால், அவரை பகிரங்கமாகவே அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரபு தேவா.

இருவரும் தாலி கட்டிக்கொள்ளாத கணவன் மனைவி யாக ரகசிய வாழ்க்கை நடத்தி வருவது தெரிந்ததே. இதனை இருவருமே மறுக்கவில்லை.

இதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு காட்டி வந்த பிரபுதேவா மனைவி ரமலத்தும், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஒரே வீட்டில் வசிக்காமல் தனித்தனியாக வசிப்பதாக ஏற்பாடாகியுள்ளதாம். இதற்காக நயன்தாராவுக்கு தனி வீடு பார்த்து வருகிறாராம் பிரபுதேவா.

நயன்தாராவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் அவர் நடித்துச் சம்பாதித்ததே. எனவே மிக பிரமாண்டமான புதிய பங்களாவை அவருக்கு வாங்கித் தரவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறாராம் பிரபுதேவா.

இந்நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் இப்போது அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

பிரபு தேவா இயக்கும் புதிய படத்துக்கு லொக்கேஷன் பார்க்கத்தான் இந்தப் பயணமாம். காரணம் இதுவாக இருந்தாலும், பெற்றோர், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோருக்கும் தனது காதல் விவகாரம் தெரிந்த பிறகு, பிரபு தேவா வெளிப்படையாக சென்றுள்ள வெளிநாட்டுப் பயணம் இது. கிட்டத்தட்ட சீக்ரட் தேனிலவு மாதிரி!

கிரிக்கெட் விளையாடும் ராய்

படப்பிடிப்பு இடைவேளையிலும், படப் பிடிப்பு இல்லாத நாட்களிலும் கிரிக்கெட் ஆடுகிறார் லட்சுமிராய். இதற்காக அவர் பயிற்சியாளர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்கும் சென்று பயிற்சியும் எடுக்கவில்லை. ஆனால் விளையாட இறங்கிவிட்டால் செஞ்சுரி அடிக்காமல் திரும்ப மாட்டாராம். காரணம் அவர் விளையாடுவது மைதானமல்ல, லேப் டாப்பில். தனது லேப் டாப்பில் கிரிக்கெட் கேமை அப்லோட் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கல்யாணத்துக்கு பிறகும் கிசுகிசு! மீனா வருத்தம்!!

Actress Meena Interview about Kisukisu
நடிகை மீனாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. திருமணத்துக்கு பிறகு மீனா நடிப்பது கணவர் வித்யாசாகர் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவற்றை‌யெல்லாம் மறுத்து நடிகை மீனா பேட்டியளித்துள்ளார். அதில், நான் என் கணவருடன் பெங்களூருவில் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றியும், என் திருமண வாழ்க்கை பற்றியும் வேண்டுமென்றே சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். எனக்கும், என் கணவருக்கும் திருமண பேச்சுவார்த்தை நடந்தபோதே, நான் சினிமாவில் நடிப்பது பற்றி எந்தவித கரு்ததும் பரிமாறப்படவில்லை. நான் நடிக்க வேண்டும் என்றோ... நடிக்ககூடாது என்றோ... என் கணவர் வீட்டில் நிபந்தனை எதுவம் விதிக்கவில்லை, என்று கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு முன்புதான் நான் சினிமாவில் பிஸியாக இருந்தபோது சிலர் கிசுகிசு பரப்பினார்கள். இப்போது கல்யாணத்துக்கு பிறகும் அதை தொடர்வது நியாயமா? சினிமா மூலம் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திய ஒரு பெண், திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே மனிதநேயம். அதை புரிந்து கொண்டு இனிமேலாவது என்னைப் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். திருமணத்துக்கு பிறகு நான் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே ‌தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது தமிழில் ஒரு படமும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருகிறேன். வதந்திக்கு பயந்து நடிப்பதை நிறுத்த மாட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன், என்று நடிகை மீனா கூறியிருக்கிறார்.