சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குமுன் தனது மகளும் சுல்தான் தி வாரியர் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யாவுடன் ஏ.ஆர்.ரகுமானை நேரில் சந்தித்துள்ளார் ரஜினி. படத்தின் பாடல்கள் குறித்து பேசியதுடன் அதனை விரைவாக முடித்துத்தர இந்த சந்திப்பில் ரகுமானிடம் கேட்டுக் கொண்டாராம் ரஜினி. முதலில் இந்த அனிமேஷன் படத்தில் ஆக்ரோஷ கதாநாயகனாக வளர்ந்து வந்தார் ரஜினி. இப்போது அதில் ஒரு முக்கியமான மாற்றம். முப்பது நிமிடங்கள் நிஜமான ரஜினியாகவே தோன்றப் போகிறாராம் சூப்பர் ஸ்டார். படம் தொடங்கிய போது இப்படியொரு யோசனை சௌந்தர்யாவிடம் இல்லை. அனிமேஷன் ரஜினியை மட்டும் காட்டினால் பொம்மைப் படம் என்று ரசிகர்கள் நினைத்து ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்த நிஜ ரஜினி கதாபாத்திரம் என்று விளக்கம் தருகிறார் சௌந்தர்யா. நிஜ ரஜினிக்கு ஒரு அறிமுக பாடல் இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க வந்திருக்கிறார். இந்த பாடலை வழக்கம் போல வைரமுத்துவே எழுதப் போவதாகவும் தகவல்.
0 Response to "சுல்தான் தி வாரியரில் நிஜ ரஜினியா?"
Post a Comment